தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர். தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம். அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- "பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழல் உருவாகி
சென்னை, சென்னை ஐகோர்ட்டில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பல புகார்களை அனுப்பியுள்ளேன். அ.தி.மு.க., உள்கட்சி தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!