INDIAN 7

Tamil News & polling

இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

23 மார்ச் 2024 11:25 AM | views : 767
Nature

சென்னை:அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கூறி உள்ளது.42 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ, அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ளது.இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளித்த பதில் மனுவில், "சூரியமூர்த்தி அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினரே இல்லை. சின்னம் தொடர்பாக மனு அளிக்க அவருக்கு உரிமை இல்லை" என பதில் அளிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையில் கே.சி.சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக, கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆவணங்களான ஏ.பி. படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.இந்த நிலையில் சூரிய மூர்த்தி மற்றொரு மனுவை நேற்று தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிவில் நீதிமன்றம் இன்றளவும் என்னை அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே பல்வேறு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ ஒதுக்க கூடாது என தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி

Image மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா?

Image சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,'

Image கோவை: மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வருகிற 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று சென்னையில்

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சென்னை, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்