INDIAN 7

Tamil News & polling

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த முதல்-அமைச்சரின் உத்தரவாதம் என்னவானது? ராமதாஸ் கேள்வி

31 மார்ச் 2024 06:34 AM | views : 876
Nature

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2022-ம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது.


அதன்பின் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, ''கண்டிப்பாக வன்னியகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேவைப்பட்டால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவேன்" என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பின் பல முறை சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக வாக்குறுதிகள் அளித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.... அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயின? இது தான் வன்னியர்களுக்கு விரைந்து சமூகநீதி வழங்கும் அழகா? வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்?

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள்? சுப்ரீம் கோர்ட்டே அனுமதி வழங்கியும் கூட வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? அவ்வாறு பேசுவது சமூகநீதிக்கே இழுக்கு அல்லவா?" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம்

Image சென்னை, பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு,

Image சேலம், சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்

Image சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம்

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்