அமெரிக்காவில் உள்ள டெல்லாஸ் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-ஆவது போட்டியில் வனிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியும், நஜ்முல் ஷாண்டோ தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணியானது பங்களாதேஷ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 124 ரன்களை மட்டுமே குறித்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரரான நிசங்கா 47 ரன்களையும், தனஞ்ஜெயா டி சில்வா 21 ரன்களையும் குவித்தனர். பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது : 19 மூவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணியின் சார்பாக விளையாடியிருந்த அந்த அணியின் கேப்டன் வனிந்து ஹஸரங்கா அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான லாசித் மலிங்காவின் சாதனை ஒன்றினை முறியடித்த விவரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது 4 ஓவர்களை முழுவதுமாக வீசிய ஹஸரங்கா 32 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெடுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் :
இதுவரை டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக 107 விக்கெட்டுகளுடன் மலிங்கா முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று எடுத்த 2 விக்கெட்டுகளின் மூலம் ஹஸரங்கா 108 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணி சார்பாக அதிக டி20 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்
2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!