தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர்,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை முன்னேற்பாடுகளில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 அறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளே சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel