தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பேச்சாளராகத் தொடர்ந்து பேசிவருபவர் பாரதிபாஸ்கர். பட்டிமன்ற பேச்சால் உலகளவில் உள்ள தமிழர்கள் மித்தியில் மிகவும் புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்திருக்கும் இவர் தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். வங்கி பணிகளுக்கிடையே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார் பாரதி பாஸ்கர். பட்டிமன்றத்தில் இவருக்கும், பேச்சாளர் ராஜாவுக்கும் நடக்கும் விவாதங்கள் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவரது பேச்சை இருக்கையை விட்டு நகராமல் ரசித்துகேட்பார்கள். கடந்த இருவாரங்களுக்கு முன்பு சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் மூவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்திருந்தார்கள். இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #BarathiBaskar
குறிச்சொற்கள்: பாரதி பாஸ்கர் BARATHI BASKAR
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel