தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்கு கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியுதவி!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.


முன்னதாக, பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்கள். நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel