மகளுடன் ஓடிய இளைஞனின் சகோதரியை குடும்பமே சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கள் வீட்டுப் பெண்ணை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரியைப் பெண்ணின் தகப்பன் உட்பட 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவரது மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்த நிலையில் ரவீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் புது வாழ்வைத் தொடங்க ஊரைவிட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த ருந்த ரவீந்தர் சிங், அவரது தம்பி வீரேந்தர் சிங், மகன் அமன் சிங் மற்றும் உறவினர் சந்தோஷ் சிங் ஆகிய நால்வருமாக சேர்ந்து கடந்த மே 1 ஆம் தேதி பஞ்சாபில் அந்த இளைஞனின் சொந்த ஊரான லூதியானாவுக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் தனது மகளை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரி இருந்த நிலையில் அவரை ரவீந்தர் அவரது தம்பி, மகன், உறவினர் என நால்வருமாக சேர்ந்து இளைஞனின் சகோதரியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.
நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை ரிலீஸ் செய்துவிடும் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் கடந்த 3 மாதகங்களாகப் பயத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலும் இருந்த இளைஞனின் சகோதரி தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதால் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளைஞனின் சகோதரி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags / குறிச்சொற்கள்:
பஞ்சாப்
பாலியல் பலாத்காரம்
வீடியோ
உத்தரப் பிரதேசம்
PUNJAB
RAPE
VIDEO
UTTAR PRADESH