தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தங்கம் விலை அதிரடியாக ரூ. 760 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 13) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயா்ந்து ரூ. 51,560-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து 6,470-க்கும் , சவரனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 51,760-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கும், கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து ரூ. 6,565-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.88.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1000 உயர்ந்து ரூ.88,500-க்கும் விற்பனையாகிறது..
குறிச்சொற்கள்: தங்கம் விலை GOLD RATE
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel