தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் மகித் சந்து

புதுடெல்லி: ஜெர்மனி நாட்டின் ஹனோவர் நகரில் உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் மகித் சந்து இறுதிப் போட்டியில் 247.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் இதுவரை இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்றுள்ளது

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel