தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

புறநகர் ரெயில் சேவை ரத்து..

சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே நான்காவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel