சபாநாயகர் வேட்பாளராக ஜேசிடி பிரபாகர் மனு தாக்கல்
சென்னை,
தமிழக சட்டசபையின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் தவெக சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கான மனுவை சட்டசபை செயலாளர் சீனுவாசனிடம் வழங்கினார். அப்போது முதல் அமைச்சர் விஜய்யும் உடனிருந்தார்.
ஜேசிடி பிரபாகரை எதிர்த்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் யாரேனும் போட்டிக்கு ஒரு சபாநாயகரை நிறுத்தினால் நாளை சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல், குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இதை இடைக்கால சபாநாயகர் கருப்பையா நடத்துவார்.
அப்படி யாரும் நிறுத்தப்படாவிட்டால் ஜேசிடி பிரபாகரே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் ரவிசங்கர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இருவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel