தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை,

சென்னை மதுரவாயல் அருகே 12 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் பழகி காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் இருந்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel