தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

Wimbledon Tennis: 3வது சுற்றில் ரிபாகினாவுக்கு அதிர்ச்சி அளித்த பெல்ஜியம் வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் நம்பர் 2 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பெல்ஜிய வீராங்கனை 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரிலும் எலினா ரிபாகினா மூன்றாவது சுற்றில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel