உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அதிர்ச்சி அறிக்கை
அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மாறிவரும் வாழ்க்கை முறை, தாமதமான திருமணம், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு காரணமாக, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இரண்டிலும் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்துள்ளது.
மருத்துவம், ஊட்டச்சத்து, சுகாதார மேம்பாடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் முந்தைய தலைமுறைகளை விட நீண்ட காலம் வாழ்கின்றனர்.
முன்னதாக ரஷியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே பிரபு விகிதம் குறைவு, முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் வளர்ந்து வரும் நாடுகளிலும் வெகுவாக காணப்படுகிறது.
முதுமை என்பது பொதுவான கடினமான காலம் என்றாலும், வறுமையில் வாடும் முதியோர்களுக்கும், தனித்து வாழும் முதியோர்களுக்கும் இது மிகவும் சவாலானது என்று அறிக்கை கூறுகிறது.
குடும்பங்களின் அளவு சுருங்கி, குழந்தைகள் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பராமரிப்பிற்கு குடும்ப உறுப்பினர்களை சார்ந்திருப்பது பெரிய கவலையாக மாறியுள்ளது.
முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் புதிய உலகிற்கு ஏற்ப, அரசுகள் தங்களின் பொருளாதாரக் கொள்கைகள், வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் சுகாதார மாதிரிகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel