தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்: பி.எப்.பணத்துக்கு 8.25 சதவீதம் வட்டி அளிக்கிறது மத்திய அரசு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை (2025-26-ம் நிதியாண்டு) 8.25 சதவீதம் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பி.எப் சேமிப்புக்கான வட்டியை 8.25 சதவீதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

பி.எப் சேமிப்புக்கான வட்டியை 8.25 சதவீதம் அளிக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 34 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் பி.எப். சேமிப்புக்கான வட்டி செலுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஜூலை 16ம் தேதிக்குள் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட வேண்டும் என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

பிஎப் கணக்கில் இருக்கும் பணத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

ரூ.1 லட்சம் இருந்தால் ரூ.8,250 வரவு வைக்கப்படும்.

ரூ.2 லட்சம் இருந்தால் ரூ.16,500 வரவு வைக்கப்படும்.

ரூ.5 லட்சம் இருந்தால் ரூ.41,250 வரவு வைக்கப்படும் என தெரிகிறது.

இந்த வட்டியானது உங்கள் பி.எப். கணக்கில் ஆண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகைக்கு கணக்கிடப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் பி.எப் வட்டியை 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel