சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப்பட்ட வருண்குமார் ஐபிஎஸ்!
தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில், முக்கிய நிர்வாகத்துறைகளின் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், பணி ஆணை வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி விக்ரமன், வருணுக்கு பதிலாக சென்னை சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேப்போல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி ரகுபதி பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel