பணமா? ஜனமா? என்றால் எனக்கு என் 'ஜனம்' தான் முக்கியம் - முதலமைச்சர் விஜய்

மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கூறினார்.

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.

* ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் சில வலி, காயங்களை மறக்க முடியாது.

* கரூர் சம்பவம் தான் அதிக வலி தருவதாய் மனதில் உள்ளது.

* கரூர் நான் வந்தபோது, எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் என போலீசார் சொல்லியிருக்கலாம் அல்லவா?

* காவல்துறையினர் எங்களிடம் கேட்காமலே கூட நிகழ்வை ரத்து செய்திருக்கலாமே?

* நெடுஞ்சாலையில் இருந்து போலீசாரே அழைத்து வந்த அந்த நாடகத்தை நான் நம்பி விட்டேன்.

* திரையில் எனது படம், பாடலை பார்த்து முத்தம் கொடுத்த எனது சகோதரியின் பிள்ளைகளை இழந்துள்ளோம்.

* வலியுடன் வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டான் என சொல்வீர்களா?

* வாய் என ஒன்று இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?

* வலியுடன் உள்ள என்னை ஏளனமாக பேசி, என் மீது பழிப்போடுவதா?

* சட்டசபையில் ஸ்டாலின் சார் நம்ம மேல் அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்வது என்ன நியாயம்?

* வலி தந்த அனைவருக்கும் 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்.

* மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

* காலத்திற்கும் அவர்கள் எழுந்திராத வகையில் தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.

* பணமா? ஜனமா? என்றால் எனக்கு என் ஜனம் தான் முக்கியம்.

* உங்களை விட காசு பணம் முக்கியமா என்ன? இதுபோல் அவர்களால் சொல்ல முடியுமா?

* கட்சி நிதி என்று சொன்ன உடனேயே சட்டசபையில் இருந்து எப்படி ஓடினார்கள் தெரியுமா?

* எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் கேலி கூத்தாக செயல்படுகிறது.

* அரசு அலுவலகங்களில் ஊழல் இன்றி வேலை தொடர்ந்து நடக்கிறது. மரியாதை அளித்து பேசுவதாக முதியவர் கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel