நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 20-ந்தேதி மாணவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கையாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என 3 கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel