தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

‘அதிமுகவுடனான கூட்டணி முறிந்தது’ - பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறிவிட்டதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணி முடிந்துவிட்டதாகவும், இப்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணியில் இருந்துவருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதத்திற்கு போட்டியிட சீட்டு வழங்காவிடினும் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.

அதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெற்றது. இத்தேர்தலில் பூவை ஜெகன்மூர்த்தி 4 இடங்களை கோரியநிலையில், அதிமுக 1 சீட்டு மட்டுமே வழங்கியது. அந்த ஒரு இடத்திலும் தோல்வியைத் தழுவியது.

தற்போதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறியுள்ளன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel