Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026

மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!

* கணவர் சந்தேகம் மாமியார் நகை பறித்ததாக அதிதி குற்றச்சாட்டு

* கோரேகான் போலீஸ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!...

*இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

*இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும்.

மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்

* கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக எல்லைக்கு அருகில் அமையும்.

* ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.

கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!...

*கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.

*இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள் திட்டமிட்டிருந்தனர்.

சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா

* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.

* மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.

வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே

* சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.

* இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது.

இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!

* மோடியை புகழும் நடிகர்கள் ஏன் துபாய் சென்றனர்

* இந்தியா நன்றாக இருந்தால் வெளிநாட்டில் ஏன் வாழ்கிறீர்கள்

'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!...

*காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை.

*அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு

* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினில் நடைபெறுகிறது.

* வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ செயல்படுகிறார்.

தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா

* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.

* மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி

* ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

* ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது.

டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

* ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்

* கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.

பாகிஸ்தான் பிராட் பீக் சிகரத்தில் பனிச்சரிவு: புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பலி!...

*ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

*உலகின் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெறும் '6 மாதங்கள் மற்றும் 6 நாட்களில்' ஏறி சாதனை படைத்தார்.

தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி

பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!

ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!

'WE THE LEADERS' இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!...

*கடற்கரை தூய்மை இயக்கம் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

* சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்

*காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம்.

* நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன்.

ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...

*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.

*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.

ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்

* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.

* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.

ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்

* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.

* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்

* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.

* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம்.

காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா

* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!...

*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.

*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.

IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel