நிச்சயம் முடிந்த சில வாரங்களில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை! ஆணும் சடலமாக மீட்பு!

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வந்த இளம் ஜோடிகள் கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்தடுத்து சில மணிநேர இடைவெளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பி. அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வி. அமல் என்ற ஜோடி ஒரே வங்கியில் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

கர்நாடகாவின் ஹன்சூர் பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றி வந்த அனுஸ்ரீ, அங்குள்ள தனது தங்குமிடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் காசர்கோட்டிற்கு கொண்டு வரப்பட்டு புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

கொச்சியின் எர்ணாகுளம் கிளையில் பணியாற்றி வந்த அமல், தனது காதலி அனுஸ்ரீயின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவர், அங்குத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எர்ணாகுளம் வடக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து அறிய அமலின் மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமலின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel