அரசியல் விரக்தியின் உச்சம்..!- நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல. தொடர் வாடிக்கையாகிவிட்டது.

பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel