இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 32 ரன்னில் ரன் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.
தேநீர் இடைவேளை வர இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. கே எல் ராகுல் காயம் காரணமாக ரிடயர் ஹர்ட் முறையில் ஆடவில்லை. கே.எல்.ராகுல் -படிக்கல் ஜோடி 150 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடிய படிக்கல் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel