ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தின விழாவான நேற்று தேசியக் கொடியுடன் மிகப்பெரிய பேரணி நடத்தினர்.

இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்பை எரிக்கப்படும். வருகிற 20-ந்தேதி ஹேமந்த் சோரன் வீடு முற்றுகை போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். உருவ பொம்மை எரிப்பு மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், JPSC-JSSC சீர்திருத்த மஞ்ச் தலைவர் ரவீந்திர பஸ்வான் இது தொடர்பாக கூறியதாவது:-

நாங்கள் ஆகஸ்ட் 20-ந்தேதி முதலமைச்சரான ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிடுவோம். எங்களுடன் அரசியல் விளையாட்டு விளையாடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். ராகுல் காந்தி சொல்வதை ஹேமன் சோரன் கேட்கவில்லை என்றால், ராகுல் காந்தி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு பஸ்வான் தெரிவித்தார்.

எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம். எங்களுடைய கோரிக்கை ரத்து செய்யப்பட்ட தேர்வு உள்பட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக தேர்வு செயல்முறை குறித்து சுதந்திரமான விசாரணை தேவை.

இது தொடர்பாக சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சந்தேகம் அளிப்பதாக இருக்கும JPSC தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel