கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு

கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல்.

தமிழக சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதானம் நடைபெறுகிறது.

முதலில், கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முதலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை. 2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்காப்புக்காக கொலை, இதில் உரிமை மீறல் எதுவுமில்லை என கர்நாடக வனத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel