அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார்... 'இன்னோவா' காரா கொடுத்தா நல்லாருக்கும்- அப்ளிகேஷன் போட்ட உறுப்பினர்
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புக்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்து நன்றி கூறினார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், எம்எல்ஏக்களுக்கு கார் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் அறிவிப்பை வெளியிடும் போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஜோதிமணி பலமுறை எழுந்து கும்பிட்டபடியே நின்று கொண்டிருந்தார். முதலமைச்சர் பேசி முடித்ததும் அதன் பின் ஜோதிமணி பேசியதாவது,
நான் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் வாகனத்துக்கு ஓட்டுநர் மட்டுமின்றி மாத வாகன படி ரூ.75,000 அலுவலக உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்ததை மிகவும் வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்.
நான் கேட்டதை நிறைவேற்றி தந்த முதலமைச்சருக்கும் பேரவை தலைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு புல்லரிக்கக் கூடிய விஷயம். சட்டசபைக்கு பொருளாதாரப் பின்புறம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வந்துள்ளார்கள். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான வாகனம் ஓட்டுனர்களுக்கு சம்பளம் உதவியாளர்களுக்கான சம்பளம் வழங்கி இருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இது எதிர்க்கட்சிக்கு கூட சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஆனால் அவர்களால் வெளிப்படுத்த முடியாது. நாங்கள் அங்கிருந்தாலும் அதைத்தான் செய்வோம்.
இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டம் 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டது. அனைத்து மக்களுக்கும் காப்பீடு திட்டத்தை பற்றி விரிவாக தெரிவிக்கப்படும்..
முதலமைச்சருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
பால் கொள்முதல் விலை அதிகரிப்பு அதேபோல கார் தொடர்பாக அறிவிப்பு இன்பமாக இருக்கிறது. ஏற்கனவே முன் காலத்தில் ஊதிய உயர்வு கொடுத்த போது இது போன்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறிய போதும் மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுப்பது ஏற்புடையது இல்லை என்று சொல்லுவோம். ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் எண்ணத்தை பாராட்டுகிறோம்.
எங்கள் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக என்ன என்பதைக் கேட்டு அதை நாங்கள் உட்படுவோம் அறிவிப்பிற்கு நன்றி கூறுகிறோம்.
மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் பிரிவு அறிவிப்பிற்கு நன்றி முதல்வர் கொடுக்கும் காரில் செல்வது மகிழ்ச்சி. அனைத்துக்கும் நன்றி.
பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் ஏற்றி தந்து உள்ளார். மருத்துவ துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனமும் உதவியாளரும் வழங்கியுள்ளார். இதற்கு இரு கரங்களைக் கூப்பி வணங்குகின்றோம்.
இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல மறைமுகமாக ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு, சுற்றி சுற்றி பம்பரமாய் வேலை செய்வதற்காக புதிய வாகனத்தை தந்துள்ளார்.
என்ன தருவார் எதை தருவார் என்று எண்ணுவதற்கு முன்னே பொன்னை தருவார் பொருளை தருவார். போதாது போதாது என்றால் தன்னையே தரக்கூடிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அதில் எந்தவித தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் கொடுத்தது இன்ப அதிர்ச்சியை வழங்கி உள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
பால் உற்பத்தியாளரின் கோரிக்கை அறிந்து தாயுள்ளத்தோடு அவர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்கு நன்றி.
கரும்பு கொள்முதல்களை உயர்த்தியது மட்டுமின்றி பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க 'இன்னோவா' காரா கொடுத்தா நல்லாருக்கும் என்றார்.
பால் கொள் முதல் விலை உயர்வு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகள் பெறுவதும், மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மட்டுமில்லாமல் உதவியாளர் என சிறப்பு அறிவிப்பு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும் என்றார்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான் வாகனம் தருகிறார்கள்.
முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நோக்கி செல்லும் எங்கள் பயணத்திற்கு வேகம் வழங்கி இருப்பதைதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.
கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. தற்போது முதல்வர் எனக்கு வேலையும் வழங்கியிருக்கிறார். காரும் வழங்கியுள்ளார் என்றார்.
ரூ. 5 லட்சம் காப்பீட்டை அதிகரித்து கொடுங்கள் என எங்கள் தலைவர் கேட்டதுண்டு அதை அதிகரித்து கொடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்று என்றார்.