குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவிக்கும் 10 தொழிலாளர்கள் - 13 பேர் மீட்பு
குஜராத் மாநிலம் காந்திநகர் அருகிலுள்ள குடாசன் பகுதியில், 'பாஸ்கி தி எம்பயர்' என்ற வணிக வளாக கட்டுமான பணி நடந்து வந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) இரவு 9:30 மணியளவில் கட்டிடத்தின் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எடைக் தாங்காமல் சாரக் கூரை சரிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.
இதன்போது பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் இடிபாடுகளுக்குள்ளும் கிரேனின் அடியயேயும் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்காக மற்றொரு பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டது.
இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என மண்டல போலீஸ் ஐஜி வீரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு குஜராத் மாநில துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் காந்திநகர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கட்டிட விபத்து குறித்துக் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, முறையான பாதுகாப்பு விதிகளுடன் கட்டுமானம் நடைபெற்றதா என்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.
அண்மையில் டெல்லியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி பிஜி தங்கும் விடுதி இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போதைய விபத்து அரங்கேறியுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel