உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா 5 லட்சம் வீரர்களை இழந்துள்ளது: இங்கிலாந்து பாதுகாப்புப்படை தலைவர்
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்த் தொடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கியது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது.
தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மூலம் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நீண்டு தூரம் சென்று தாக்கும் டிரோன்களை ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளை தாண்டியும் நடைபெறும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு பக்கத்திலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக போரில் ரஷியாவைச் சேர்ந்த 1.5 மில்லியன் (15 லட்சம் வீரர்கள்) காயம் மற்றும் உயிரிழந்திருக்கலாம். இதில் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் என்று இங்கிலாந்தின் பாதுகாப்புப்படை தலைவரான விமானப்படை தலைவர் மார்ஷல் ரிச்சர்ட் நைட்டன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. இது ஒத்துப்போகும் வகையிலான தகவலை தற்போது இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இதற்கு ரஷியா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
வீரர்களுடன் அதிக அளவில் ராணுவ தளவாடங்களையும் இழந்துள்ளது ரஷியா. 10 ஆயிரம் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், சுமார் 3,000 வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள், 370 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை இழந்துள்ளது என்றும் நைட்டன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் உக்ரைனின் இழப்பை அவர் வெளிப்படுத்தவில்லை.
இதற்கிடையே வெள்ளிக்கிமையான இன்று தொடர்ந்த 2-வது நாளாக உக்ரைனின் கீவ் நகரில் உள்ள சாலையோ கியாஸ் நிலையத்தை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இரண்டு கியாஸ் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் இரணடு பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
மத்திய உக்ரைனில் உள்ள பவ்லோஹார்டு நகரில் உள்ள ஷாப்பில் மால் மிது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் ஐந்து பேர் பலியானார்கள்.
ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 777 டிரோன்களை தடுத்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel