தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

6,000mAh பேட்டரியுடன் அறிமுகமான சாம்சங் ஸ்மர்ட்போன்

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி A08 மாடலை தேர்ந்தெடுக்கப்பட்ட உலக சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது நிறுவனத்தின் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை ரேம் மற்றும் மெமரி ஆப்ஷனில் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி A08 மாடல் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமராவுடன் டூயல் லென்ஸ் செட்டப் உள்ளது. இது 6,000mAh பேட்டரியுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒன் யுஐ 8 ஓ.எஸ். உடன் வருகிறது. டூயல் சிம் ஸ்லாட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2032 வரை அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் உறுதியளிக்கிறது. புதிய கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் HD+ 720x1,600 பிக்சல் PLS LCD டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A08 மாடலில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6nm செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 டிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A08 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார், 8MP செல்ஃபி கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A08, 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு இந்த மாடலில் 4ஜி எலடிஇLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, BeiDou, Galileo மற்றும் OZSS ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில், பாதுகாப்பிற்கான கைரேகை ஸ்கேனர், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்ட் சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் UAH 10,699 (இந்திய மதிப்பில் ரூ. 23,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது சாம்சங் உக்ரைன் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி A08 ஸ்மார்ட்போன் டார்க் புளூ, கிரீன் மற்றும் சில்வர் என மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel