தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும்.

கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப் பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவுசெய்து, அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel