தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஆசிய விளையாட்டு: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்தப் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இன்று பேட்மிண்டன் தனிநபர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டோமோக மியாசகி உடன் மோதினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இரு முறை பதக்கம் வென்ற சிந்து, போட்டியை முழு பொறுப்புடன் ஆடினார்.

அவர் ஜப்பானின் மியாசகியை 21-9, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பிவி சிந்து மூன்றாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel