சிறப்புச் செய்தி

பிரான்ஸில் மாணவர்கள் போராட்டத்தில் மீண்டும் வன்முறை- கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

11 hours ago 24 பார்வைகள்
பிரான்ஸில் மாணவர்கள் போராட்டத்தில் மீண்டும் வன்முறை- கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

பிரான்சில் பள்ளிக் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரியும், பள்ளி கட்டிடங்கள் சேதம், அடிப்படை கட்டமைப்பு இல்லாத வகுப்பறைகள், ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை கண்டித்தும் மாணவர்கள் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்தநிலையில் பிரான்ஸ் முழுவதும் பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நாடு ழுழுவதும் மாணவர்கள் பேரணிகளை நடத்தினார்கள்.

தலைநகர் பாரிஸ், மாா்சேய், ஸ்ட்ராஸ்பா்க் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த பேரணிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 2.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே மாண வர்கள் பேரணியில் வன் முறை வெடித்தது. பாரிசில் நடந்த பேரணியின்போது சாலையில் குப்பை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை போட்டு எரித்தனர். மேலும் போலீசாரை நோக்கி சில பொருட்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க தடியடியும் நடத்தப்பட்டது. சில இடங்களில் போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.

இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மாணவர்களின் போராட்டம் நாடு தழுவிய இயக்கமாக மாறி உள்ளதால் அதிபர் மெக்ரான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்