தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஜெய்பீம் பட பாணியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கூறு ஆய்வு முடிந்தும் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்துள்ளார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதே இதற்குக் காரணமெனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகளின் சமாதானத்தைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

மணிகண்டனின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு வலியுறுத்திய உறவினர்கள், உடலை வாங்காமல் ஊர் திரும்பினர். இதையடுத்து மணிகணிடனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel