தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ராதாபுரம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவரின் கார், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

பணகுடி : நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று அதிகாலையில் காரியாகுளத்தில் உள்ள இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.இதேபோன்று செந்தில்குமார் வீட்டின் அருகே உள்ள விவசாயி அருண்குமார் என்பவரது வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாயின. கார் பாதி எரிந்து கருகியது. இது குறித்து அருண்குமார் அளித்த புகார் அளித்தார்.அதன் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel