பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது - ப.சிதம்பரம் விமர்சனம்

By Admin | Published in செய்திகள் at ஜூன் 16, 2024 ஞாயிறு || views : 446

பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது - ப.சிதம்பரம் விமர்சனம்

பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது - ப.சிதம்பரம் விமர்சனம்

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில், மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு தெளிவான சான்று.பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் பினாமி (பா.ம.க.) மூலம் போரிடுகின்றன. இந்தியா கூட்டணி, தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

P CHIDAMBARAM VIKRAVANDI ADMK ப.சிதம்பரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அ.தி.மு.க புறக்கணிப்பு
Whatsaap Channel
விடுகதை :

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

விடுகதை :

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

விடுகதை :

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next