POLLING 📊 TN ELECTION 2026

 

கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 16 பேரும் கவலைக்கிடம் - ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை

1 year ago 20 ஜூன் 2024 11:03 AM | views : 197
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை கைது ரஜினிகாந்த் CONGRESS UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் திருமாவளவன் இந்திய அணி INDIAN CRICKET TEAM கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE வடகிழக்கு பருவமழை அமமுக பிரதமர் மோடி AJITH தென்காசி தீபாவளி KEERTHY SURESH நெல்லை ASSEMBLY ELECTIONS NELLAI PARLIAMENT ELECTION TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் THIRUMAVALAVAN OPS EDAPPADI PALANISWAMI திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON SEEMAN அஜித் PRIME MINISTER MODI MADURAI பாலியல் தொல்லை CSK தமிழக சட்டசபை தேர்தல் மதுரை ஓபிஎஸ் வன்னியர் கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION