POLLING FLAMES

 

டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ்... கிறிஸ் கெயிலை முந்தி நிக்கோலஸ் பூரான் புதிய உலக சாதனை!

1 year ago 22 ஜூன் 2024 07:32 AM | views : 229
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு பார்படாஸ் நகரில் 46வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் நேர்த்தியான பந்து வீச்சில் திணறலாக விளையாடி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கவுஸ் 29, நிதீஷ் குமார் 26 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3, ராஸ்டன் சேஸ் 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.


அதைத்தொடர்ந்து 129 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் தடுமாறி 15 (14) ரன்களில் ஹர்மீத் சிங் அவுட்டானார். ஆனால் அவருக்கும் சேர்த்து எதிர்ப்புறம் அமெரிக்க பவுலர்களை அடித்து நொறுக்கிய சாய் ஹோப் வேகமாக ரன்கள் சேர்த்தார். அந்த வகையில் அரை சதம் கடந்த அவர் 4 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 82* (39) ரன்கள் குவித்தார்.

அவருடன் இணைந்து விளையாடிய நிக்கோலஸ் பூரான் தன்னுடைய பங்கிற்கு ஒரு பவுண்டரி 3 சிக்ஸருடன் 27* (12) ரன்கள் குவித்தார். அதனால் 10.6 ஓவரிலேயே 130/1 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. இப்போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து இந்த உலகக் கோப்பையில் நிக்கோலஸ் பூரான் மொத்தம் 17* சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2012 டி20 உலகக் கோப்பையில் கிறிஸ் கெயில் 16 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக இந்த வருடம் அனைத்து அணிகளும் சேர்ந்து மொத்தம் இதுவரை 412* சிக்சர்கள் பறக்க விட்டுள்ளன. அதன் வாயிலாக வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பையாக 2024 தொடர் சாதனை படைத்துள்ளது.


இதற்கு முன் 2021 டி20 உலகக் கோப்பையில் 405 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் முதல் வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நல்ல நிலைக்கு வந்துள்ளது. மறுபுறம் போராடாமலேயே தோற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS தமிழகம் PARLIAMENT ELECTION கோவை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் BIGG BOSS TAMIL RAJINIKANTH கொரோனா வன்னியர் மதுரை ELECTION COMMISSION சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை அஜித் தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை