ஐசிசி 2024 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரோஹித் சர்மா 9, ரிஷப் பண்ட் 0, சூரியகுமார் யாதவ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 34/3 ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக வந்த அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நிதானமாக விளையாடினார். அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த இந்த ஜோடியில் அக்சர் படேல் 47 (31) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இந்தியா சாம்பியன்:
இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி முக்கிய நேரத்தில் அரை சதமடித்து 76 (59) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சிவம் துபே அதிரடியாக 27 (16) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 176/7 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தலா மகாராஜ் 2, அன்றிச் நோர்ட்ஜே விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 177 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸ் 4 ரன்களில் பும்ரா வேகத்தில் போல்ட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 ரன்னில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானதால் 12/2 என தென்னாபிரிக்க ஆரம்பத்திலேயே தடுமாறியாது. ஆனால் அப்போது டீ காக் – ட்ரிஷன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.
அதில் ஸ்டப்ஸ் 31 (21) ரன்களில் அக்சர் படேல் சுழலில் போல்ட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ஹென்றிச் கிளாசின் தம்முடைய ஸ்டைலில் அடித்து நொறுக்கினார். அவருடன் எதிர்புறம் விளையாடிய டீ காக் 39 (31) ரன்னில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் அதிரடி காட்டியதால் இந்தியாவின் கையை விட்டு கிட்டத்தட்ட நழுவியது. ஆனால் இந்த ஜோடியில் கிளாசின் அரை சதமடித்து முக்கிய நேரத்தில் 52 (27) ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தது திருப்பு முனையாக அமைந்தது.
ஏனெனில் அதை பயன்படுத்திய பும்ரா 18வது ஓவரில் 2 ரன்கள் மட்டும் கொடுத்து மார்கோ யான்சென் விக்கெட்டை எடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார். அதை அர்ஷ்தீப் சிங் 19வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து அழுத்தத்தை அதிகரித்தார். அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்திலேயே டேவிட் மில்லரை 21 ரன்களில் சூர்யாகுமாரின் அபார கேட்ச்சால் பாண்டியா அவுட்டாக்கினார்.
அதோடு நிற்காத அவர் அடுத்து வந்த ரபாடாவையும் 4 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 20 ஓவரில் தென்னாபிரிக்காவை 169/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையும் படிங்க: 34/3 டூ 176 ரன்ஸ்.. ரோஹித் வார்த்தையை காப்பாற்றிய கிங் கோலி.. அக்சர், துபே.. இந்தியா உலக சாதனை ஸ்கோர்
குறிப்பாக 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து உலகின் புதிய டி20 சாம்பியனாக சாதனை படைத்த இந்தியா 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வந்த வேதனை தோல்விகளை உடைத்து சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற முதல் ஆசிய அணி என்ற பிரம்மாண்ட வரலாற்றையும் இந்தியா படைத்தது.
மு.க.ஸ்டாலின்
திருமாவளவன்
அண்ணாமலை
அன்புமணி
அதிக வெயில்
கூட்ட நெரிசல்
தண்ணீர் வசதி இல்லாமை
திட்டமிடல் இல்லாமை
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி உச்சகட்டத்தை தொட்டுள்ளது. கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அதில் சமீபத்தில் பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்தது போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேசம் சவால் விடுத்துள்ளது. ஆனால் கடந்த 12 வருடங்களாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில்
சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் திருமண நிச்சயதார்த்தம்!
வேட்டையன் படத்தினால் கொந்தளிக்கும் கோவில்பட்டி.. என்னதான் பிரச்னை?
அந்தரங்க லீக் வீடியோவுக்கு நச் பதில் கொடுத்த ஓவியா !
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
டீ குடிக்க கூப்பிட்டவரின் மண்டையை பீர் பாட்டிலால் பொளந்த கணவன் மனைவி!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்
மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!