ஜிம்பாப்வே நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு நிதானமாக விளையாடிய ஓப்பனிங் ஜோடி 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. ஆனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடத் தவறிய அந்த ஜோடியில் மருமணி 32 (31) ரன்களிலும் வேஸ்லி 25 (24) ரன்களிலும் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.
இந்தியா வெற்றி:
போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த பிரையன் பெனட் 9 (14), ஜான் கேம்பல் 3 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் சிக்கந்தர் ராசா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (28) ரன்கள் எடுத்த போது தேஷ்பாண்டே வேகத்தில் அவுட்டானார். இறுதியில் டியோன் மேயர்ஸ் 12, க்ளைவ் 7, பாரஸ் கான் 4* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஜிம்பாப்வே 152/7 மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் கலீல் அஹ்மத் 2, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அபிஷேக் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 153 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் – கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் சுப்மன் கில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ஜெய்ஸ்வால் தம்முடைய பாணியில் அடித்து நொறுக்கி ரன்களை குவித்து வேகமாக அரை சதமடித்தார்.
அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய கில் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடி தனது பங்கிற்கு சதமடித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 93* (53), கில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 58* (39) ரன்களும் எடுத்தனர். அதனால் 15.2 ஓவரில் 156/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
இதையும் படிங்க: 4வது ஜிம்பாப்வே போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்.. கில் முடிவால் என்ன ஆகுமோ என ரசிகர்கள் கலக்கம்
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 150+ ரன்கள் இலக்கை 1 விக்கெட் கூட இழக்காமல் எட்டிப் பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அத்துடன் வரலாற்றில் இரண்டாவது முறையாக 8 வருடங்கள் கழித்து ஒரு டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி பெற்றுள்ளது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா கடைசி போட்டிக்கு முன்பாகவே இத்தொடரை வென்றுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் தோற்ற பின் அங்கிருந்து மீண்டெழுந்து முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்றுள்ள இந்தியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!