INDIAN 7

Tamil News & polling

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

08 அக்டோபர் 2025 03:33 PM | views : 104
Nature

நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது, மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி "மருத்துவப் பயனாளிகள்" என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு?

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி "பேச் ஒர்க்" செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல்களத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள

Image சென்னை, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம்

Image கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்