நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் தங்கி இருந்த நிலையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன். சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் ஆனது கடந்த எட்டாம் தேதி முடிவடைந்தது
அந்த இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பேசினார் அப்போது திமுக தலைவரை பற்றி முன்னாள் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி மற்றும் திமுக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
அந்த வீடியோனது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் திமுக ஐடிவிங் கை சேர்ந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாட்டை சாட்டை துரைமுருகனை போலீசார் தேடி வந்த நிலையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் தென்காசியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து தென்காசி சென்ற போலீசார் திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது திருச்சி சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் அவரது தனிப்படையினர் சாட்டை துரைமுருகனை கைது செய்து தற்போது திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
Actress Amala Paul latest hot Collection