விரைவில் துவங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார்.
அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவரே செயல்பட்டார். அதனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணியை போல ரோஹித்துக்குப் பின் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பரிந்துரையால் அவரை துணை கேப்டனாக கூட அறிவிக்காத தேர்வுக்குழு சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.
அத்துடன் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமித்துள்ளதை வைத்து கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த கேப்டனை உருவாக்குவதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையின் துணை கேப்டன். நாம் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். எனவே இயற்கையாக துணை கேப்டனாக இருந்தவர் தற்போது கேப்டனாக வேண்டும். சூரியகுமார் எனக்கு பிடிக்கும். ஆனால் இங்கே நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை தற்போது உங்களை நாங்கள் கேப்டனாக விரும்பவில்லை என்று பாண்டியாவிடம் தேர்வுக்குழு சொல்லியிருக்கலாம்”
“அப்படியானால் ஏன் அவரை டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக நியமித்தீர்கள்? இப்போது அவரை நீக்கி விட்டு சுப்மன் கில்லை நியமித்துள்ளது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் கில் என்னுடைய அணியில் கூட இருக்க மாட்டார். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருப்பேன். நீங்கள் அடுத்த தலைமுறையை மிகவும் மிருதுவாக உருவாக்க வேண்டும்”
“எடுத்துக்காட்டாக தோனி தலைமையில் விராட் துணை கேப்டனாக இருந்தார். தோனிக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் ரோஹித் துணை கேப்டனாக இருந்தார். ரோகித் தலைமையில் துணைக் கேப்டனாக இருந்த பாண்டியா தற்போது கேப்டனாகவும் சூர்யா துணை கேப்டனாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஹர்திக் பாண்டியா பாவம். 2024 டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக சிறப்பாக விளையாடிய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்”
“அப்படிப்பட்ட அவரை நீக்கியுள்ள நீங்கள் கில்லை துணைக் கேப்டனாக நியமித்துள்ளீர்கள். இப்படி செய்வது இந்திய அணிக்கு நல்லதல்ல. எனவே பாண்டியாவுக்காக வருந்துகிறேன். அதே சமயம் நான் சூரியகுமாரின் ரசிகன். கேப்டனாக அவர் அசத்துவதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!