இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடி வருகிறது. ஜூலை 27ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை பரிதாபமாக தோற்றது.
பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 161/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 53, நிஷாங்கா 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து இந்தியா சேசிங் செய்கையில் மழை வந்ததால் 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது.
அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 30, கேப்டன் சூரியகுமார் 26, ஹர்திக் பாண்டியா 22* ரன்கள் எடுத்து 6.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ள இந்தியா புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் புதிய கேப்டன் அசலங்கா தலைமையிலும் இலங்கை சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் முதல் போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் கடைசி 5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே தோல்விக்கு காரணமானதாக இலங்கை கேப்டன் அசலங்கா தெரிவித்துள்ளார். போதாகுறைக்கு மழை வந்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் உட்பட மிடில், லோயர் மிடில் ஆர்டரிலும் டெத் ஓவர்களிலும் நாங்கள் வெளிப்படுத்திய பேட்டிங் ஏமாற்றமாக அமைந்தது”
“கண்டிப்பாக நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங்கில் முன்னேற வேண்டும். இந்த பிட்ச்சில் பந்து பழையதாகும் போது பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகிறது. ஆனால் தோல்விக்கு அது காரணமல்ல. சர்வதேச வீரர்களான நாங்கள் வெற்றிக்கான வழியை கண்டறிய வேண்டும். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் பேட்டிங்கில் எங்களுடைய அணுகுமுறையில் முன்னேற்றம் காண வேண்டும்”
“இப்போட்டியில் நாங்கள் 15 – 18 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக மழையும் எங்களுக்கு எதிராக விளையாடியது. இருப்பினும் அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. மழையால் வெளிப்புற களங்கள் ஈரமாக இருந்ததால் 8 ஓவர்கள் கொண்ட போட்டியில் எதிரணி வெல்வது எளிது” என்று கூறினார்.
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!