நள்ளிரவு 2 மணி - நடுரோட்டில் நிர்வாணமாக நடந்த தம்பதி.. வீடியோவால் பரபரப்பு
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் நிர்வாணமாக நடந்துசென்ற தம்பதிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாக்பூரின் லக்ஷ்மிநகர் சதுக்கதில் உள்ள சாலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ஆடைகளேதுமின்றி நிர்வாணமாக நடுத்தர வயது பெண்ணும் ஆணும் வாக்குவாதம் செய்தபடி நடந்து வந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவ்வழியில் மோட்டார் வாகனத்தில் சென்ற இருவர், அவர்களைப் படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். சமீப காலமாகவே நாக்பூரில், தரம்பேட் [Dharampeth], சாதர்[Sadar], பஜாஜ் நகர் [Bajaj Nagar] என பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது.தற்போது சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தை அடுத்து அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். பகிரவும்: