சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆவது சனிக்கிழமையான இன்றும் 4ஆவது சனிக்கிழமையான 24ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2024- 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் குறித்து கடந்த ஜூன் மாதம் ஒரு அறிவிப்பு வெளியானது.
அதன்படி பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-2025) வருடாந்திர நாட்காட்டியில் 220 நாட்கள் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டன.
குறிப்பாக 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும். இதற்கிடையே பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் பள்ளி வேலை நாளாக இருந்த 13-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்த இந்த மாதத்திலும் சனிக்கிழமையான இன்று மற்றும் 24-ந் தேதி என 2, 4-ம் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் தொடக்க பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து இந்த நிகழ்வை முறையாக நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!