இயக்குநர் மிஷ்கின் கொட்டுக்காளி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.நடிகர்கள் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கிய இப்படம் வருகிற ஆக.23 ஆம் தேதி திரைக்கு வருகிறது..இதன், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “வினோத் ராஜ் என்னை சந்தித்தபோது கூழாங்கல் வெளியாகவில்லை. அடுத்ததாக, என்ன படம் எடுக்கப்போகிறாய் என கேட்டேன். கொட்டுக்காளியை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறி, இசையமைப்பாளர் என யாரும் இப்படத்திற்கு இல்லை என்றார். அப்போது, வினோத்தை மிகவும் திமிர்பிடித்தவன் என நினைத்தேன்.
கொட்டுக்காளி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து பேய் பிடித்ததுபோல் இருக்கிறேன். தன் படத்தை வைத்தே அவன் என்னை செருப்பால் அடித்துவிட்டான். இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நான் நிர்வாணமாக நிற்கவும், நடனமாடவும் தயார்.
இப்படத்தில், சூரியைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. இந்தப் படத்திற்குப் பிறகு சூரியை மிகச்சிறந்த நடிகராக பார்க்கலாம். கொட்டுக்காளி பெரிய அனுபவம். இதைத் தயாரித்த, நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடப்பட வேண்டியவர். தெய்வத்தன்மையும் தாய்மையும் கொண்ட இப்படத்தை நாம் கைவிடக்கூடாது” என புகழ்ந்து பேசியுள்ளார்..
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!