நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.
முன்னதாக கூழாங்கல் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள இயக்குனர் வினோத்ராஜின் 2வது படமாக உருவாகியுள்ளது கொட்டுக்காளி.இந்த படம் ரசிகர்களையும் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படமும் சிறப்பான வெற்றியை சூரிக்கு கொடுக்கும் நிலையில் அவர் இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன், சூரி மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இன்று பார்த்துள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு அவர் படக்குழுவினரை பாராட்டி 3 பக்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இது ஒரு பொக்கிஷம் என்று நெகிழ்ந்துள்ளார்.இந்தக் கடிதத்தில், படத்தில் சூரியை தவிர வேறு தெரிந்த முகங்கள் இல்லை என்று கூறியுள்ள கமல்ஹாசன்,
3 நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் என்ற கேரக்டர் மட்டுமே தெரிந்தார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். பின்னணி இசை என்று எதுவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள கமல்ஹாசன், இயற்கைதான் படத்தின் இசை என்பதையும் பாராட்டியுள்ளார். ஆணாதிக்க குறியீடுகளாக சேவல், சீறும் காளை,
பாண்டியன், பூசாரி என பலர் இருந்தாலும் நாயகி அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். கடைசியில் பாண்டியனையும் நம்மையும் இயக்குநர் பகுத்தறிவின் கரையோரமாக மனிதத்தின் விளிம்பில் நிறுத்திவிட்டு சந்தோஷமாக கிளம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!
திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!