POLLING FLAMES

 

மருத்துவர் கொலைக்கு முன் நள்ளிரவில் நடந்தது என்ன? கண்காணிப்பு கேமரா காட்சிகள்

1 year ago 24 ஆகஸ்ட் 2024 02:45 PM | views : 195
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெண் மருத்துவரின் சடலம் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ‘ப்ளுடூத்’ கருவி ஆகியவற்றின் அடிப்படையில், சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டாா்.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்கு கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியை வழங்கியது.

33 வயதான சஞ்சய் ராய்க்கு 4 முறை திருமணமாகியுள்ளதாகவும், அவர் பெண் பித்துப் பிடித்த நபர் என்பதும், குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளதுடன் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராக சஞ்சய் ராய் பணியாற்றியுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்..

இந்த நிலையில், சம்பவத்தன்று(ஆக. 9) கொல்கத்தா மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சஞ்சய் ராய், ஆக. 9-ஆம் தேதியன்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குள் நுழைவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. மேலும், கழுத்தில் ‘ப்ளுடூத்’ கருவி மாட்டிக்கொண்டிருந்த சஞ்சய் ராய் உயிரிழந்த பெண் மருத்துவரையும், இரவில் அவருடனிருந்த மருத்துவர்களையும், சஞ்சய் ராய் நோட்டமிடும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதிக்கு மது அருந்திவிட்டு போதையில் சென்ற சஞ்சய் ராய், அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உடலுறவு வைத்திருந்ததாகவும், அதன்பின் மறுநாள் அதிகாலை 1 மணியளவில் ஆர். ஜி. கர் மருத்துவமனைக்கு அவர் சென்றிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி, சிறை வளாகத்தில் இன்று(ஆக. 24) சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர். ஜி. கர் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்களை, மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று(ஆக. 24) சிபிஐயிடம் சமர்ப்பித்துள்ளதாக கொல்கத்தா காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK தவெக AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் AIADMK காங்கிரஸ் PMK கனமழை பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் CONGRESS முக ஸ்டாலின் ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN கோவை இந்திய அணி தமிழகம் திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI சீமான் தமிழ்நாடு INDIAN CRICKET TEAM சட்டசபை தேர்தல் அமமுக கைது KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM OPS AJITH PARLIAMENT ELECTION TAMIL ACTRESS தேவர் தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI நெல்லை வடகிழக்கு பருவமழை கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கள்ளக்காதல் தென்காசி RAJINIKANTH மதுரை தூத்துக்குடி SURIYA வன்னியர் அஜித் திருப்பரங்குன்றம் விடுமுறை ELECTION COMMISSION தீபாவளி CSK கீர்த்தி சுரேஷ் சூர்யா