ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை!

By Admin | Published in செய்திகள் at ஆகஸ்ட் 28, 2024 புதன் || views : 285

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை!

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை!

அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன்.இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். அதன்பின், இந்தப் பங்குகளை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார்.

இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கான உத்தரவு கடந்த 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

DMK MP JAGATHRATCHAGAN அமலாக்கத்துறை அபராதம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன்
Whatsaap Channel
விடுகதை :

உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?

விடுகதை :

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?

விடுகதை :

இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next